என்ன இது அம்மன் பாட்டு மாதிரி இருக்கு… விமர்சனங்களை சந்திக்கும் கங்குவா நெருப்பு பாடல்!
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும் கங்குவா படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார். இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் அக்டோபர் 10 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது படத்தின் பிஸ்னஸை தொடங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.
இந்நிலையில் இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் முதல் சிங்கிள் பாடலான ஆதி நெருப்பே… ஆறாத நெருப்பே… “ என்ற துள்ளலிசைப் பாடல் வெளியாகியுள்ளது. பாடலின் கதைக்களம் ஒரு போருக்கு முன்பாக பழங்குடி மக்கள் தங்கள் தெய்வத்தை வேண்டுவது போல உருவாக்கப்பட்டுள்ளது. சூர்யா மற்றும் நடனக் கலைஞர்களின் உக்கிரமான நடனமும் அதற்கேற்றார் போலவே உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பாடல் ரசிகர்களைப் பெரியளவில் கவர்ந்தாலும், அம்மன் பாடல் போல இருப்பதாக சில எதிர்மறையான விமர்சனங்களும் வந்தவண்ணம் உள்ளன. அதற்கேற்றார் போல பாடலும் ஆடி மாதத்தில் வெளியாகி இருப்பதாக ட்ரோல்களும் எழுந்துள்ளன.