திங்கள், 16 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2024 (08:20 IST)

சூர்யாவின் கங்குவா படத்தில் வில்லனாக கார்த்தி… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும்  கங்குவா படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள  நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் அக்டோபர் 10 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது படத்தின் பிஸ்னஸை தொடங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.

இதற்கிடையில் படத்தின் இரண்டாம் பாகத்தை சில ஆண்டுகள் கழித்து எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இரண்டாம் பாகத்துக்கான முன்னோட்ட காட்சிகள் விரைவில் படமாக்கப் பட உள்ளதாகவும் அதில் நடிகர் கார்த்தி நெகட்டிவ் ரோலில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.