1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2024 (14:45 IST)

‘ஆதி நெருப்பே ஆறாத நெருப்பே…” - வெளியானது சூர்யாவின் கங்குவா முதல் சிங்கிள் பாடல்!

நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும்  கங்குவா படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள  நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் அக்டோபர் 10 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது படத்தின் பிஸ்னஸை தொடங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.

இந்நிலையில் இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ ஆதி நெருப்பே… ஆறாத நெருப்பே… “ என்ற துள்ளலிசைப் பாடல் வெளியாகியுள்ளது.