திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (09:19 IST)

மாஸ் ஹீரோக்களின் படங்களில் இரண்டு காட்சிகளும், ஒரு பாடலும்தான் இருக்கும்- கங்கனா ரனாவத் தடாலடி!

சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத்  இந்திரா காந்தி வேடத்தில் எமர்ஜென்ஸி என்ற படத்தில் நடித்து இயக்கியுள்ளார். இந்த படம் செப்டம்பர் 6 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், சமீபத்தில் இதன் டிரைலர் ரிலீஸாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் கங்கனா ரனாவத் அளித்த ஒரு நேர்காணலில் “நான் பல்வேறு நடிகர்களோடும் இணைந்து பணியாற்ற ஆசைப்படுகிறேன். மூன்று கான் நடிகர்களையும் (அமீர் கான், சல்மான் கான், ஷாருக் கான்) எனது இயக்கம் மற்றும் தயாரிப்பில் நடிக்க வைக்க ஆசை. அவர்களால் மக்கள் திரளுடன் ஒன்ற முடியும். அவர்களால் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும். எனக்கு மிகவும் பிடித்த இர்பான் கானை இயக்க முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது.

ஆனால் நான் கான் நடிகர்களின் படங்களையும், அக்‌ஷய் குமார் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோரின் படங்களையும் நிராகரித்துள்ளேன். அவர்களின் படங்களில் கதாநாயகிக்கு இரண்டு காட்சிகளும், ஒரு பாடலும் மட்டும்தான் இருக்கும். அவர்கள் படங்களில் நடித்தால் அது பெண்களின் முக்கியத்துவத்தைக் குறைக்கும். எந்த ஹீரோக்களும் உங்களை வளர்த்து விட மாட்டார்கள். ஹீரோவால் மட்டுமே ஹீரோயினை முன்னேற்றிவிட முடியும் என சொல்லும் முன்மாதிரியாக நான் இருக்க விரும்பவில்லை” எனக் கூறியுள்ளார்.