திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (11:03 IST)

முட்டாளே உங்களை போல இல்ல நாங்க..! – அமெரிக்க பெண் பாடகரை திட்டிய கங்கனா!

டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து அமெரிக்க பாப் பாடகி பேசியதற்கு கங்கனா கடுமையாக திட்டி பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது உலகளவில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் விவசாய போராட்டம் குறித்த செய்தி ஒன்றை தனது ட்விட்டரில் பகிர்ந்த அமெரிக்க பாப் பாடகி ரிஹானா “இதுபற்றி நாம் ஏன் பேசவில்லை?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதை சுட்டிக்காட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை கங்கனா ரனாவத் “அவர்கள் பற்றி யாரும் பேசவில்லை, ஏனெனில், அவர்கள் விவசாயிகள் அல்ல. இந்தியாவை பிளவுபடுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள். அமெரிக்காவை போல  பிளவுபட்ட தேசத்தை சீனா தனது காலனி ஆதிக்கத்திற்குள் கொண்டு வர முயற்சிக்கும். பொறுமையாக இருங்கள் முட்டாளே, உங்களை போல நாங்கள் எங்கள் நாட்டை விற்க மாட்டோம்” என திட்டியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.