வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (23:57 IST)

சத்தான கீரை வகைகளும் பயன்களும் !!

தினமும் கீரை வகைகளை உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். கீரைகளில் அதிகப்படியான இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. 
 
 
முருங்கை கீரை: முருங்கை கீரை கசப்பு தன்மை கொண்டது. முருங்கைக் கீரை சத்தான உணவு. முருங்கை கீரையில் வைட்டமின் ஏ,பி,சி புரதம், இரும்புச் சத்து போன்ற  எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
 
முருங்கை கீரை இலையை எடுத்த பின் மிஞ்சிய காம்புகளை மட்டும் நறுக்கி மிளகு சேர்த்து ரசம் வைத்து உட்கொள்ள கை, கால் அசதி நீங்கும். முருங்கை பூவை  சம அளவு துவரம் பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் உண்ண கண் எரிச்சல், வாய் நீர் ஊறல் மற்றும் வாய் கசப்பு போகும்.
 
அகத்தி கீரை: அகத்தி கீரையை தொடர்ந்து வாரம் இருமுறை உணவில் சேர்த்து கொண்டால் ரத்தக் கொதிப்பு, மூலம் பித்த கோளாறுகள் தீரும். பல மருந்துகளை  சாப்பிடுவதால் ஏற்படும் உடல் வெப்பத்தை தணிக்க அகத்தி கீரையுடன் பாசி பருப்பு சேர்த்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
 
அகத்தி கீரை சாப்பிடும் போது இறைச்சி சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் சிலருக்கு அலர்சி உண்டாகலாம். அதுமட்டுமல்லாமல் மருந்துகளின் வீரியத்தை இது  குறைக்கும்.
 
தண்டுக்கீரை: மூல நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அடிக்கடி சமைத்து உண்ண அந்த நோய் குணமாகும். இந்த கீரையை அடிக்கடி உட்கொண்டால் நீர்க்கடுப்பு,  நீர்த்தாரை எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
 
அரைக்கீரை: அரைக்கீரையுடன் வெங்காயம் சேர்த்து நெய்யில் பொரித்து சாப்பிட்டு வந்தால் புதுரத்தம் ஊறி தாது அணுக்கள் உற்பத்தியாகும்.
 
மூக்கிரட்டை கீரை: மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் தண்டினை சாப்பிட்டு வருவதால் சிறுநீரகங்களின் உருவாகும் கற்கள் மற்றும் சிறுநீரக தொற்றுநோய்கள்  வருவதை தடுத்து நிறுத்தும். 
 
பாலக்கீரை: பாலக்கீரையில் வைட்டமின் ஏ,பி ,சி உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு பாலக்கீரை சிறந்தாகும். அதோடு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த கீரையை  சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்கும்.