வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: ஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (11:15 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சோகம்,! கமலே இப்படி சொல்லிவிட்டாரே..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓட்டு போடுபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாக கமல் வேதனை தெரிவித்துள்ளார்.

 
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கோடிக்கணக்கானோர் ஓட்டுகளைப் போட்டார்கள். அது மட்டுமில்லாமல் பல கோடி பார்வையாளர்களையும் அந்த நிகழ்ச்சி பெற்று பெரும் வரவேற்பை பெற்றது.
 
ஆனால் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி முந்தைய நிகழ்ச்சியை போல் பெரும் வரவேற்பை பெறவில்லை. லட்சக்கணக்கானோர் நிகழ்ச்சியை பார்த்த போதிலும் ஓட்டுகள் போடுவது மிகவும் குறைவாகவே உள்ளது.  
 
வாரம் முழுவதும் வந்த ஓட்டுகள் மொத்தமாக வெறும் 15 லட்சம் கூட வரவில்லை. இது முதல் சீசனோடு ஒப்பிடும் போது 10ல் ஒரு பங்கு கூட வரவில்லை என கமல் தெரிவித்தார்.அதனால் இனி நிகழ்ச்சி பார்க்கும் அனைவரும் ஓட்டு போடுங்கள் என வெளிப்படையாகவே கேட்டுவிட்டார்.