ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 8 செப்டம்பர் 2018 (19:16 IST)

பிக் பாஸில் இந்த வாரம் வெளியேறப் போவது இவரா!

பிக் பாஸ் 2 தமிழ் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது . 82 நாட்களை கடந்து விட்ட இந்த நிகழ்ச்சி, இன்னும் மூன்று வாரங்களே நடைபெற உள்ளது . எனவே வெற்றியாளராக யார் இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 
குறிப்பாக இந்த வாரம் யார் வெளியே வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தவார எலிமினேசன் லிஸ்டில் ஜனனி ,விஜயலட்சுமி , சென்ராயன், மும்தாஜ், ஐஸ்வர்யா ஆகியோர் உள்ளனர்.
 
இதில்  மிகக் குறைவான ஓட்டுக்களை பெற்றுள்ளதால், ஐஸ்வர்யா வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சென்றாயன் ஐஸ்வர்யாவை விட அதிகமாகவே ஓட்டுக்களை பெற்றுள்ளதாக தெரிகிறது.