ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 மார்ச் 2021 (13:46 IST)

உதயநிதி தயாரிப்பில் படம் நடித்திருந்தாலும் நான் நேர்மையானவன்! கமல் பேச்சு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேர்மையற்றவர் என்று கூறியுள்ளார்.

கமல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்ததில் இருந்தே திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் நேர்மையற்றவர்கள் என்றும் ஊழலில் ஈடுபடுபவர்கள் என்றும் குற்றம் சாட்டி வருகிறார். இப்போது நடக்கும் தேர்தல் பிரச்சாரத்திலும் அதைத் தொடர்ந்து வருகிறார்.

நேற்று கோவையில் பேசிய கமல்ஹாசன் ‘நான் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் பணம் நடித்து சம்பளம் பெற்றுள்ளேன். அந்த பணம் சரியான பணமா என்று சரிபார்த்துதான் வாங்கினேன். அவரோடு சேர்ந்த படம் பண்ணிவிட்டாரே இவர் நேர்மையானவர் இல்லை என்று சொன்னால் நான் எப்படி ஒத்துக்கொள்வேன். உதயநிதி நேர்மையானவர் இல்லை என்பது என் வாதம். ஆனால் நான் நேர்மையானவன் என்பதே எனது வாழ்க்கை’ எனக் கூறியுள்ளார்.