பிரியங்கா வெளியேற்றமா? கமல் கொடுத்த டுவிஸ்ட்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மொத்தம் ஒன்பது பேர் நாமினேஷன் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர்களில் நேற்று இசைவாணி மற்றும் இமான் அண்ணாச்சி ஆகிய இருவரும் காப்பாற்றப்பட்டனர். இதனை அடுத்து 7 பேர் தற்போது நாமினேஷன் பட்டியலில் உள்ளனர் என்பதும் இவர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்பட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
வருண், அபிநய், சின்னப்பொண்ணு, அக்சரா, பாவனி, சுருதி மற்றும் பிரியங்கா ஆகியோர்களில் இன்று யார் வெளியேற்றப்படுவார் என்பது குறித்து கூறும் காட்சியின் புரோமோ விடியோ சற்று முன் வெளியாகி உள்ளது
அதில் வீட்டு ஞாபகம் வந்து பலர் அழுததை நான் பார்த்திருக்கிறேன்.ஆனால் ஸ்னாக்ஸ் ஞாபகம் வந்து அழுததை நான் இப்பொழுதுதான் பார்க்கிறேன் என பிரியங்காவை கூறியவுடன் ஒருவேளை அவர் வெளியேற்றப்படுவாரோ என்ற அச்சம் சக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. ஆனால் பிரியங்கா காப்பாற்றப்பட்டார் என்று கமல்ஹாசன் ட்விஸ்ட் வைத்து சொன்னது பிரியங்கா நிம்மதி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது