கமல் தோத்ததும் ஒரு வகையில் நல்லதுதான்… ரசிகர்கள் ஆறுதல்!

Last Modified புதன், 5 மே 2021 (13:26 IST)

நடிகராக இருந்த கமல் அரசியல்வாதியாக மாறி கட்சி ஆரம்பித்து தேர்தலை எதிர்கொண்டு தோல்வி அடைந்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இது அவரது கட்சியினரையும் ரசிகர்களையும் மனதளவில் சோர்வடைய செய்துள்ளது.

ஆனால் கமலின் சினிமா ரசிகர்கள் ‘இதுகூட ஒருவகையில் நல்லதுக்குதான். அவர் இனிமேல் முடிக்காமல் இருக்கும் இந்தியன் 2 மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் நடித்து முடிப்பார். நாமும் கமலை திரையில் பார்த்து ரொம்ப நாளாச்சுல்ல’ என ஆறுதல் பட்டு செல்கின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :