முதல்முறையாக இணையும் கமல்-சிம்பு: சிகப்பு ரோஜாக்கள் 2?
முதல்முறையாக இணையும் கமல்-சிம்பு
கமலஹாசன் ஸ்ரீதேவி நடிப்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய சிகப்பு ரோஜாக்கள் திரைப்படம் கடந்த 1978ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகி வருகிறது
பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்க இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் சிம்பு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி கமலஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
சிகப்பு ரோஜாக்கள் படத்தின் முதல் பாகத்தில் கமலஹாசன் நடித்த அதே கேரக்டரில் அவர் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தில் வேலைக்கார சிறுவனாக நடித்தவர் தான் வளர்ந்து தற்போது சிம்புவாக மாறியிருப்பதாகவும் கதை அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது
இருப்பினும் இந்த படம் தற்போது ஆரம்பகட்ட நிலையிலேயே இருப்பதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது