செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 10 செப்டம்பர் 2020 (10:14 IST)

ஜனவரிக்குள்ள முடிங்க… இல்லன்னா என்ன பிடிக்க முடியாது – கமல் போட்ட கண்டீஷன்!

பல ஆண்டுகளாக இழுத்துக் கொண்டே போகும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை ஜனவரி மாதத்துக்குள் முடிக்க சொல்லி உத்தரவிட்டுள்ளாரம் கமல்.

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’ இந்தத் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை தொடங்கும் முன்னரே இந்த படம் டிராப் ஆனது என்று ஒரு வதந்தி கிளம்பியது. ஆனால் அதன் பின்னர் பல தடைகளை மீறி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

ஆனாலும் பல தடங்கல்களால் படப்பிடிப்பு நின்று நின்று நடந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பின்போது நடந்த விபத்து ஒன்றினால் மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின் கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை. இந்நிலையில் இப்போது படப்பிடிப்புகளை நடத்த அரசு அனுமதித்துள்ள நிலையில் ஜனவரி மாதத்துக்குள் தன்னை வைத்து எடுக்கவேண்டிய அனைத்துக் காட்சிகளையும் எடுத்துக்கொள்ள சொல்லி கமல் சொல்லியுள்ளாராம். ஏனென்றால் அதன் பிறகு 2021 சட்டமன்ற தேர்தலில் முழுக் கவனம் செலுத்த உள்ளாராம். இதைக் கேட்ட படக்குழுவினர் என்ன செய்வது என்ற யோசனையில் உள்ளனராம்.