1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 10 செப்டம்பர் 2020 (16:52 IST)

ஒரே ஒரு வசனத்தால் 30 ஆண்டுகளாக பிரிந்த ஆளுமைகள்! யார் யார் தெரியுமா?

சிம்லா ஸ்பெஷல் படத்தின் ஒரு வசனத்தைக் கமல் மாற்ற சொல்ல அதற்கு விசு மறுக்க இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது.

சிம்லா ஸ்பெஷல் திரைப்படம் கமலின் திரை வாழ்க்கையில் முக்கியமான திரைப்படம். அந்த படத்துக்கு வசனம் எழுதியவர் பிரபல கதாசிரியர் விசு. இருவருமே தன் துறையில் வித்தகர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதில் இடம்பெற்ற ஒரு வசனத்தை மாற்ற சொல்லியுள்ளார் கமல்.

அதற்கு வசனகர்த்தாவான விசு மறுக்கவே, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. அது விசு சினிமா துறையை விட்டு விலகும் வரை சரியாகவில்லை. அதனால் விசு, எந்தவொரு கமலின் படத்திலும் நடிகராகக் கூட பங்கேற்றதில்லையாம்.