வெள்ளி, 14 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 2 செப்டம்பர் 2025 (10:55 IST)

100 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ‘லோகா’… பேன் இந்தியா ஹிட்!

100 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ‘லோகா’… பேன் இந்தியா ஹிட்!
ஓனம் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘லோகா’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் ஆகியோர் நடிப்பில் டோம்னிக் எழுதி இயக்கியுள்ள ‘லோகா’ திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியாகும் vampire வகை சூப்பர் வுமன் வகைத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தை துல்கர் சல்மான் தன்னுடைய ‘wayfrayers films’ நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இந்த படம் மோகன்லாலின் ‘ஹ்ருத்யபூர்வம்’ திரைப்படத்தோடு வெளியானது. முதலில் குறைவான திரைகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று தற்போது 100க்கும் மேற்பட்ட திரைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் முதல் வார இறுதியில் இந்த படம் 60 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து 100 கோடி ரூபாய் வசூலை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் மலையாள சினிமாவில் இருந்து முதல் பேன் இந்தியா ஹிட்டாக ‘லோகா’ அமைந்துள்ளது.