செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2020 (17:42 IST)

தொழிலதிபரை திருமணம் செய்கிறாரா காஜல் அகர்வால்?

தொழிலதிபரை திருமணம் செய்கிறாரா காஜல் அகர்வால்?
தமிழ் தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இவர் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் 
 
இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கும் தொழிலதிபர் கௌதம் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கௌதம் ஒரு இன்டீரியர் டிசைனர் என்றும் மும்பையில் பிரபல தொழிலதிபராக இருந்து வருகிறார் என்றும் தெரிகிறது 
 
காஜல் மற்றும் கௌதம் குடும்பத்தினர் நெருக்கமான நட்பை உடையவர்கள் என்றும் இதனை அடுத்து தற்போது இந்த திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இரு தரப்பினர்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் இந்த திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது 
 
இந்த திருமணம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் காஜல் அகர்வால் தரப்பில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது