திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 1 மார்ச் 2023 (09:54 IST)

இரண்டாவது முறையாக அஜித்தோடு நடிக்கும் பிரபல நடிகை? லேட்டஸ்ட் அப்டேட்!

அஜித் 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளை மகிழ் திருமேனி இப்போது செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் காஜல் அகர்வால் நடிகையாக நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவர் அஜித்தோடு விவேகம் படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அருண் விஜய், அஜித்தோடு என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க அருள்நிதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.