1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (20:30 IST)

கால்பந்து விளையாட்டில் ஆர்வம் செலுத்தும் அஜித் மகன் ஆத்விக் - வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவருக்கு ஆத்விக் , அனுஷ்கா என்ற ஒரு மகள் மற்றும் மகள் இருக்கிறார்கள். 
 
இருவரும் தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அஜித் தன்னை போலவே தன் பிள்ளைகளையும் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட வைத்துள்ளார். அவரது மகள் டென்னிஸில் ஆர்வம் கொண்டு விளையாடும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகும். 
 
அந்தவகையில் தற்போது மகன் ஆத்விக் கால்பந்து விளையாடி எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  அந்த புகைப்படத்தில் மனைவி ஷாலினியும் உடன் இருக்கிறார்.