திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 20 ஏப்ரல் 2022 (11:32 IST)

காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை – என்ன பெயர் தெரியுமா?

நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருந்த நிலையில் தற்போது ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

தமிழில் பொம்மலாட்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு, இந்தி என பல படங்களிலும் பிஸியாக நடித்து வந்த காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிச்சுலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கர்ப்பமான காஜல் அகர்வால் தனது கர்ப்பக்கால புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தார். இன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தைக்கு “நெயில் கிச்சுலு” என்று பெயர் வைக்கப்பட உள்ளதாக காஜல் தம்பதியினர் அறிவித்துள்ளனர். புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தம்பதியருக்கு தெரிவித்து வருகின்றனர்.