வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 14 ஏப்ரல் 2022 (18:06 IST)

”இனிமேல் எல்லோமே மாறப்போகுது”… குழந்தைப் பிறப்பு குறித்து காஜல் அகர்வால் நெகிழ்ச்சி!

காஜல் அகர்வால் தனது கர்ப்பகால பிரச்சனைகளை எதிர்கொள்வது குறித்து உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல். இந்நிலையில் கடந்த லாக்டவுனின் போது அவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு இப்போது சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகியுள்ளார்.

இப்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர் மேலும் கர்ப்பகால பிரச்சனைகளை எதிர்கொள்ள கணவர் எவ்வாறு உதவினார் என்பது குறித்தும், இனிவரும் காலம் முந்தைய காலத்தை விட எவ்வாறு மாறப்போகிறது என்பது குறித்தும் நீண்ட பதிவைப் பகிர்ந்துள்ளார்.