வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 14 நவம்பர் 2024 (11:30 IST)

பாலிவுட்டில் அவர எல்லோரும் ஒதுக்குனாங்க… கங்குவா வில்லன் குறித்து சூர்யா பகிர்ந்த சம்பவம்!

சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘கங்குவா’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸாகிறது. இந்த  படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக 2D மற்றும் 3D தொழில்நுட்பத்தில் இயக்கியுள்ளார். படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த படத்துக்காக சூர்யா இந்தியா முழுவதும் பல நகரங்களுக்கு சென்று ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

அப்படி ஒரு நேர்காணலில் கங்குவா படத்தின் வில்லன் பாபி தியோல் குறித்து பேசியுள்ளார். அதில் “நாமெல்லாம் வியந்து பார்த்த ஒரு ஹீரோ அவர். ஆனால் இடையில் அவருக்கு சறுக்கல் வந்த போது அவரை எல்லோரும் ஒதுக்கியுள்ளார்கள். அவர் ஒரு பார்ட்டிக்கு சென்றால் கூட ‘ஏன் அவரை எல்லாம் அழைத்தீர்கள்’ எனக் கேட்டுள்ளார்களாம். அப்படியான கடின நாட்களில் அவர் குடும்பம்தான் அவருடன் கூட இருந்துள்ளது. அனிமல் திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக முக்கியமான படமாக அமைந்தது” எனப் பேசியுள்ளார்.