வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 25 மே 2021 (17:21 IST)

கைதி 2 உருவாவது நிச்சயம்… கார்த்தி பிறந்தநாளில் தயாரிப்பாளர் உறுதி!

கைதி படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி என்று தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தெரிவித்துள்ளார்.

மாநகரம், கைதி ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாஸ்டர் படத்தை அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் என்ற படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கைதி படம் இப்போதைக்கு உருவாகுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவிடம் ரசிகர்கள் இந்த கேள்வியை முன்வைத்த போது ‘கைதி 2 கண்டிப்பாக உருவாகும். அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன’ எனக் கூறியுள்ளார்.