புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 3 ஏப்ரல் 2019 (07:52 IST)

அஜித் பட சாதனைக்கு தடை போடுகிறதா சூர்யாவின் 'காப்பான்'?

அஜித், வித்யாபாலன் நடிப்பில் எச்.வினோத் இயக்கிய 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் டப்பிங் உள்பட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் படக்குழுவினர் சுறுசுறுப்பாக இந்த படத்தின் பணியை கவனிக்கவுள்ளனர்,
 
இந்த நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் 'விஸ்வாசம்' போலவே நீண்ட நாள் தமிழக திரையரங்குகளில் திரையிடப்பட்டு மாபெரும் வெற்றி பெறும் என்று சாதனை படைக்கும் என்ற நம்பிக்கை அஜித் ரசிகர்களிடையே உள்ளது. ஆனால் ஆகஸ்ட் 23ஆம் தேதி அல்லது 30ஆம் தேதி சூர்யாவின் 'காப்பான்' படத்தை திரையிட அப்படத்தின் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
 
இந்த இரண்டு தேதிகளில் ஏதாவது ஒரு தேதியில் 'காப்பான்' ரிலீஸ் ஆனால் பெரும்பாலான திரையரங்குகளில் 'நேர் கொண்ட பார்வை' படத்தை தூக்க வேண்டிய நிலை வரும் என்பதால் அஜித் பட சாதனையை சூர்யா படம் தடுத்துவிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது