திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 29 மே 2018 (19:56 IST)

‘காலா’ டிரெய்லரைக் கலாய்க்கும் நெட்டிசன்கள்

நேற்று வெளியான ‘காலா’ டிரெய்லரைக் கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.



ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுக்க இந்தப் படம் ரிலீஸாகிறது.

இந்தப் படத்தின் டிரெய்லர், நேற்று வெளியானது. அதில், ‘கூட்டத்தைக் கூட்டுங்கடா’ என்று ரஜினி டயலாக் பேசுகிறார். ஏற்கெனவே வெளியான டீஸரில், ‘வேங்க மவன் ஒத்தயில நிக்கேன், தில்லிருந்தா வாங்கலே’ என்று டயலாக் பேசிய ரஜினி, இப்போது கூட்டத்தைக் கூட்டச் சொல்லியிருப்பதுடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்று நடந்த போராட்டத்தின்போது போலீஸுக்கு ஆதரவாகப் பேசிய ரஜினி, தற்போது தூத்துக்குடி சம்பவத்தில் போலீஸுக்கு எதிராகப் பேசுகிறார். அதையும் இதையும் ஒப்பிட்டும் நக்கல் செய்கின்றனர் நெட்டிசன்கள்.