1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 7 ஜூன் 2018 (15:26 IST)

தியேட்டருக்கு முன்பே தமிழ் ராக்கர்ஸில் வெளியான காலா - படக்குழு அதிர்ச்சி

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் தமிழ் ராக்கார்ஸ் இணையதளத்தில் வெளியான விவகாரம் படக்குழு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் பல தியேட்டர்களில் அதிகாலை 5.30 மற்றும் 6.30 மணியளவில் முதல் காட்சி திரையிடப்பட்டது. இதைக்காண ரஜினி ரசிகர்கள் குவிந்திருந்தனர். மேலும், படம் நன்றாக இருப்பதாகவும் இணைய தளங்களில் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், புதிய திரைப்படங்களை சட்டத்திற்கு புறம்பாக வெளியிட்டு வரும் தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் காலா படம் வெளியாகியுள்ளது. அதுவும், புத்தம் புதிய பிரிண்டுடன் காலா படம் வெளியாகியுள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழகத்தில் சில தியேட்டர்களில் காலை 6.30 மணிக்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும்பாலான தியேட்டர்களில் 9.45 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே தமிழ் ராக்கார்ஸ் இணையதளத்தில் காலா படம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.