செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 7 ஜூன் 2018 (15:25 IST)

ரஜினி ரசிகர்களை விரட்டியடித்த கன்னட அமைப்பினர் : காலா படம் வெளியாகுமா?

பெங்களூரில் காலா திரைப்படத்தை வெளியிட விடாமல் கன்னட அமைப்பினர் அடாவடியில் ஈடுபட்டது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் பல தியேட்டர்களில் அதிகாலை 5.30 மற்றும் 6.30 மணியளவில் முதல் காட்சி திரையிடப்பட்டது. இதைக்காண ரஜினி அதிகாலை முதலே ரசிகர்கள் குவிந்திருந்தனர். 
 
அதேபோல், பல போராட்டங்களுக்கு பின் கர்நாடகாவிலும் காலா திரைப்படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. சில வினியோகஸ்தர்கள் காலா படத்தை வெளியிட முன்வந்தனர். 
 
இந்நிலையில், பெங்களூரில் காலா படம் திரையிடப்படும் தியேட்டர்களின் முன்பு இன்று அதிகாலை முதலே ரஜினி ரசிகர்கள் குவிந்திருந்தனர். முதல் நாள் முதல் காட்சியை காண அவர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், பாலாஜி என்ற தியேட்டருக்கு வந்த கன்னட அமைப்பினர் ரஜினி ரசிகர்களை தியேட்டர்களிலிருந்து மிரட்டி வெளியேற்றினர். இதனால், படத்தை பார்க்க முடியாமல் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
 
போலீசாரின் பாதுகாப்போடு காலா படத்தை திரையிட அரசு நடவடிக்கை வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் கன்னட அமைப்பினர் அடாவடியில் ஈடுபவதை கர்நாடக அரசு வேடிக்கை பார்ப்பது அங்குள்ள ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் ரஜினி ரசிகர்கள் படத்தை காண பெங்களூருக்கு அருகில் உள்ள ஒசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளுக்கு செல்வதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.