இயக்குனர் விக்ரமன் மகனை அறிமுகப்படுத்தும் கே எஸ் ரவிக்குமார்!

mahendran| Last Modified திங்கள், 5 ஜூலை 2021 (16:36 IST)

இயக்குனர் விக்ரமனின் மகன் கனிஷ்காவை கே எஸ் ரவிக்குமார் அறிமுகப்படுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் சினிமாவில் ராசியில்லாதவர் என்று பெயரெடுத்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சினிமாவை விட்டே ஒதுங்கிய நிலையில் அவரை தனது உதவியாளராக சேர்த்துக்கொண்டவர் விக்ரமன். அதன் பின்னர் கே எஸ் ரவிக்குமார் இயக்குனராக மாறி தமிழ் சினிமாவின் கமர்சியல் பட இயக்குனர்கள் பட்டியலில் முக்கியமான இடத்தைப் பெற்றார்.

இந்நிலையில் இயக்குனர் விக்ரமனின் மகன் கனிஷ்கா நடிக்க ஆர்வப்படுகிறார் என்பதை தெரிந்துகொண்ட கே எஸ் ரவிக்குமார், அவர் முதலில் நடிக்கும் படத்தை தான் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். புதுமுக இயக்குனர் இயக்கும் இந்த படத்துக்கு பிளாட்பார்ம் நம்பர் 7 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :