செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 11 ஜனவரி 2021 (10:23 IST)

அந்தாதூன் ரீமேக்கில் கே எஸ் ரவிக்குமார் – வில்லனாக நடிக்கிறாரா?

அந்தகன் படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’அந்தாதூன்’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார் . அந்தகன் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த படத்தை அவரது தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தை முதலில் மோகன் ராஜா இயக்க இருந்தார். ஆனால் லூசிபர் படத்தின் ரீமேக் வாய்ப்பு வந்ததால் அதில் இருந்து விலகினார்.  இதையடுத்து பொன்மகள் வந்தாள் புகழ் ஜே ஜே பிரட்ரிக் இயக்க உள்ளார். இந்த படத்தில் பிரசாந்தோடு கார்த்திக் மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

இந்த படத்தின் ப்ரோமோவை கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட்டது படக்குழு.  இதையடுத்து இப்போது படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்தில் கார்த்திக் மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். அதையடுத்து இப்போது கிட்னி திருடும் மருத்துவர் கதாபாத்திரத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே 2001 ஆம் ஆண்டு பிரசாந்த் நடித்த தமிழ் படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார் கே எஸ் ரவிக்குமார்.