திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 2 ஜனவரி 2021 (14:05 IST)

அஜித்தோடு சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பிரசாந்த் – எந்த படத்தில் தெரியுமா?

நடிகர் பிரசாந்த் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம்வந்தவர். ஆனால் இப்போது சரியாக வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார்.

வைகாசி பொறந்தாச்சு, வண்ண வண்னப் பூக்கள் மற்றும் செம்பருத்தி என தனது சினிமா வாழ்க்கையை ஹாட்ரிக் ஹிட்டோடு ஆரம்பித்தவர் பிரசாந்த். அதன் பின்னரும் 90 களில் பல ஹிட் படங்களையும் முன்னணி இயக்குனர்களோடும் சேர்ந்து பணியாற்றினார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. அதற்கு முக்கியக் காரணம் அவரின் படங்கள் தொடர் தோல்வி அடைந்ததே.

இந்நிலையில் 21 ஆண்டுகளுக்கு முன்னர் அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் அப்பாஸ் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் பிரசாந்தைதான் நடிக்க கேட்டார்களாம். ஆனால் அவரோ அஜித் கதாபாத்திரம் அல்லது மம்மூட்டி கதாபாத்திரத்தில் வேண்டுமானால் நடிக்கிறேன் எனக் கூறி அந்த வாய்ப்பை மறுத்தாராம். ஏற்கனவே அவர் அஜித்தோடு கல்லூரி வாசல் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.