1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2020 (08:05 IST)

மதிய சாப்பாட்டிற்கே காசில்லாதவருக்கு கால்ஷீட் கொடுத்த அஜித்: கே.ராஜன் கிண்டல்!

மதிய சாப்பாட்டிற்ஏ காசில்லாத போனிகபூருக்கு அஜித் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்து வருவதாக சினிமா விழா ஒன்றில் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் கிண்டல் செய்துள்ளார் 
 
அஜீத்தை ஹீரோவாக அறிமுகம் செய்தவர் சோழா பொன்னுரங்கம் என்றும் அவரை படிப்படியாக தூக்கி விட்டவர் சிவசக்தி பாண்டியன் என்றும் தற்போது அவர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு கால்சீட் கொடுத்து உதவாமல், கோடீஸ்வரர் போனி கபூருக்கு தொடர்ச்சியாக அஜித் கால்ஷீட் கொடுத்து வருவதாகவும் அஜித் மீது கே.ராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார் 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பாண்டியன் என்ற படத்தை சினிமா தொழில் நலிவடைந்தவர்களுக்காக நடித்துக் கொடுத்தார் என்றும், அதில் கிடைத்த லாபத்தில் ஐந்து பேர் சொந்தவீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார்கள் என்றும் அதே போல் மற்ற உச்ச நட்சத்திரங்களும் தங்களை ஆரம்பத்தில் கைதூக்கி விட்ட தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் ஒரு படம் நடித்து கொடுக்க வேண்டும் என்றும் கே.ராஜன் கேட்டுக் கொண்டார்
 
அஜித் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கே ராஜனுக்கு ஒருசிலர் கண்டனமும், ஒரு சிலர் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்