1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 29 ஜனவரி 2020 (21:05 IST)

அஜித்தின் வலிமை படத்துக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்: ரசிகர்கள் அதிர்ச்சி

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து வரும் ‘வலிமை’ திரைப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வாரம் தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
இந்த படத்தை போனி கபூர் மற்றும் ஜீடிவி இணைந்து தயாரித்து வந்த நிலையில் தற்போது ஜீடிவி இந்த படத்தில் இருந்து திடீரென விலகி விட்டதாகவும் இதனால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக போனிகபூர் படத்தை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது
 
ஏற்கனவே தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இரண்டு பெரிய பட்ஜெட் படங்களை போனிகபூர் தயாரித்து  வருவதால் வலிமை படத்தை தனியாக தயாரிக்கும் திட்டம் இல்லை என்றும் இதற்காக அவர் வேறு ஒரு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தை முடிந்த பின்னரே வலிமை படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது 
 
இருப்பினும் வலிமை படம் டிராப் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் இந்த படம் டிராப் என பரவி வரும் தகவல் வதந்தி என்றும், காலதாமதம் ஆனாலும் திட்டமிட்டபடி அதே பட்ஜெட்டில் இந்த படம் முடிக்கப்படும் என்றும் வலிமை படக்குழுவினர்கள் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது