திங்கள், 3 மார்ச் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 2 மார்ச் 2025 (13:57 IST)

அந்த மாதிரி ஜோதிகா நடித்துள்ளாரா?.. இந்தி சீரிஸ் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால் அதன் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.

இதையடுத்து பாலிவுட்டில் ஷைத்தான் என்ற படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் ஆகியோரோடு இணைந்து நடித்தார். இந்த படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது. இதையடுத்து அவர் தொழிலதிபர் ஸ்ரீகாந்த் போலாவின் பயோபிக் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘டப்பா கார்டெல்’ என்ற தொடர் ரிலீஸானது.

இதில் ஜோதிகா கதாபாத்திரம் சிகரெட் குடிப்பது போன்ற காட்சிகள் எல்லாம் இருக்க, அதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜோதிகா கதாநாயகியாக உச்சத்தில் இருந்த போது கூட இதுமாதிரியான கதாபாத்திரங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.