புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 30 அக்டோபர் 2018 (13:41 IST)

ஜோதிகாவின் காற்றின் மொழி ரிலீஸ் தேதி அறிவிப்பு ..!

செக்கச்சிவந்த வானம் வெற்றி படத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா கைவசம் ராதாமோகனின் ‘காற்றின் மொழி' மற்றும் எஸ்.ராஜ் படம் போன்ற 2 படங்கள் உள்ளது. இதில் ‘காற்றின் மொழி' படம் துமாரி சுலு என்ற ஹிந்தி படத்தின் ரீமேக். வித்யா பாலன் நடித்திருந்த ‘துமாரி சுலு' பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டானது.
 
இந்த படத்தை கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் மற்றும்  டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்துள்ளார். நேஹா தூபியா கேரக்டரில் லக்ஷ்மி மஞ்சுவும், மனவ் கௌல் கதாபாத்திரத்தில் விதார்த்தும் நடித்துள்ளனர். 
 
சிம்பு சிறப்பு ரோலில் நடித்துள்ள இந்த படத்திற்கு  ஏ.ஹெச்.காஷிப் இசையமைத்துள்ளார்.இதற்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார், பொன் பார்த்திபன் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.
 
இந்நிலையில் சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் வரும் நவம்பர், 16-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.