வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 30 அக்டோபர் 2018 (13:04 IST)

இதையெல்லாம் பார்த்து தினம் தினம் புலம்பணும் இல்லாட்டி.... லதா ரஜினிகாந்த் நெத்தியடி

வரம்பு மீறி விமர்சனம் செய்பவர்களை கண்டு தினம் தினம் புலம்பாமல், கண்டுகொள்ளாமல் நம் வேலையை நாம் பார்க்க வேண்டும் என்று ரஜினி குறித்த விமர்சனங்களுக்கு லதா ரஜினிகாந்த் நெத்தியடியாக பதில் அளித்துள்ளார்.

 
ரஜினி எப்போது அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னாரோ அப்போது முதலே சமூக வலைதளங்களில் ரஜினியை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார். 
 
திரையுலகிலும், அரசியல் உலகிலும் ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இத்தனைக்கும் ரஜினி எந்த விஷயத்திலும் ஆழமாக யோசித்தே செயல்பட்டு வருகிறார். எந்த கட்சியையும் இதுவரை வெளிப்படையாக விமர்சித்ததில்லை.
 
எனினும் அரசியல் வருகை குறித்து அறிவித்துவிட்டு, தீவிரமாக செயல்படமால் இருப்பதாக ரஜினியை கடுமையாக விமர்சிக்காதவர்கள் இல்லை. ரஜினிக்கு தன்னை பற்றி சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள் அத்தனையும் தெரியும் என்பது லதா ரஜினிகாந்த்தின் சமீபத்திய பேட்டியில் நன்றாகவே  தெரிகிறது. ரஜினியை வரம்புக்கு மீறி விமர்சிப்பதை அவரது குடும்பத்தினர் எந்த மாதிரியான மனநிலையில் எதிர்கொள்கிறார்கள் என்பதை இப்போது பார்க்கலாம்.
 
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு லதா ரஜினிகாந்த் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
 
ரஜினி ஒரு குழந்தை மாதிரி மனசு உடையவர்.  நல்லதுகெட்டதையெல்லாம் நாங்க எங்க குடும்பத்துக்குள்ள  ஷேர் பண்ணிக்கொள்வோம். ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டுப் பேசிக்கொள்வோம்.
 
அவருக்கு புத்திமதி சொல்லவேண்டிய அவசியமே இல்லை. அப்படியொரு தெளிவோடு இருப்பவர் ரஜினி. எந்த விஷயமாக இருந்தாலும் அதில் முழுமையான விவரங்களை சேகரித்துவைத்திருப்பார். அவருக்கு அடுத்துஎன்ன செய்யவேண்டும் என்று நாங்கள் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.
 
இன்றைய உலகம் ரொம்பவே வித்தியாசமாகிவிட்டது. வரம்பு மீறிய செயல்பாடுகள் கொண்ட சமூகமாக இப்போது மாறிவிட்டது. இவர் யார், இவரின் வயது என்ன, இவர் செய்த சாதனைகள் என்னென்ன என்பதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட தெரிந்து கொள்ளாமல், புரிந்துகொள்ளாமல் அவர்களை டார்கெட் செய்து, வரம்பு மீறிய விமர்சனங்களை வைப்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது.
 
இதையெல்லாம் பார்த்துவிட்டு, தினம் தினம் புலம்பிக்கொண்டிருக்க வேண்டும். அல்லது நாம்பாட்டுக்கு எப்போதும் போலவே நன்மைகள் செய்துகொண்டே இருக்கவேண்டும். நாங்கள் இரண்டாவதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம்.
 
இவ்வாறு லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.