44 வயசிலும் ஒர்க் அவுட்டில் மிரட்டும் ஜோதிகா - ஜிம் வீடியோ வைரல்!
நடிகை ஜோதிகா கடந்த 1998 ஆம் ஆண்டு அஜித் நடித்த வாலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன்பின் அவர் விஜய் அஜித் சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
திருமணத்திற்கு பின்னர் ஒரு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் 36 வயதினிலே, என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். அதன் பின்னர் மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்
தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து வரும் அவர் தற்போது குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு எல்லோரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார். 44 வயதில் இப்படியா? என எல்லோரும் செம ஷாக் ஆகி கமென்ஸ்ட் செய்து வருகிறார்கள்.