புதன், 4 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 25 ஜூலை 2024 (10:34 IST)

உலக சினிமா ரசிகர்களைக் கவர்ந்த ஜோக்கர் 2 டிரைலர்!

ஹாலிவுட்டில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான ஜோக்கர் முதல் பாகம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

டூட் ஃபிலிப்ஸ் இயக்கத்தில்,  ஹாக்கீன் பீனிக்ஸ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜோக்கர்’ திரைப்படம்  நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம்  ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட விருதுகளை பெற்றது. இந்த படம்  உலகமெங்கும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை டிசி காமிக்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது டீசர் தற்போது வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் ஒரு கொலை செய்யும் ஜோக்கர், அதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது போலவும், ஆனால் அவருக்கு அளவுகடந்த மக்கள் ஆதரவு கிடைக்க, அடுத்தடுத்து என்ன நடக்கின்றன என்பதை சொல்லும் படமாக இருக்கும் என்பதை டிரைலர் கோடிட்டு காட்டுகிறது. படம் அக்டோபர் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.