திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 20 நவம்பர் 2023 (13:50 IST)

படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளரை தாக்கினாரா ஜோஜு ஜார்ஜ்?

மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜோஜு ஜார்ஜ். ஜகமே தந்திரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர்.  மேலும் பபூன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் பனி என்ற படத்தின் மூலம் இயக்குனராக பணியாற்றுகிறார். மலையாள சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளரான வேணு பணியாற்றி வருகிறார்.  இவர் தமிழில் ‘குணா’, ‘மின்சார கனவு’, ‘அன்பே ஆருயிரே’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் வேணு அநாகரிகமாக நடந்துகொள்ள, அவருக்கும் இயக்குனர் ஜோஜு ஜார்ஜ் அவரோடு கைகலப்பில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து வேணுவை நீக்கிவிட்டு வேறொரு ஒளிப்பதிவாளரோடு படத்தை ஷூட் செய்துள்ளார்.

இதையடுத்து ஒளிப்பதிவாளர் வேணு, தனக்கு குண்டர்களால் மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளதாக திருச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.