புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (18:03 IST)

அந்த மாதிரி படம் எடுப்பது கஷ்டம் – நடிகர் ஜீவா ஓபன் டாக் !

நடிகர் ஜீவா

அனைத்து விதமான ரசிகர்களையும் திருப்திப் படுத்துவது மாதிரி படம் எடுப்பது கடினம் என்று நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.

ஜித்தன் ரமேஷ் ஆண்ட்டி ஹீரோவாக நடிக்கும் மிரட்சி என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சென்னையில் நடந்தது. அதில் படத்தின் குழுவோடு கொண்ட நடிகர் ஜீவாவும் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது ‘யாருமே தோல்விப் படம் கொடுக்க வேண்டுமென நினைப்பதில்லை. ல்லோரின் திறமையும் ஒருநாள் ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படும். டர் படத்தில் ஷாருக் கானுக்கு அமைந்தது போல இந்த படத்தின் ரமேஷுக்கு அமையும் என எதிர்பார்க்கிறேன். ஆங்கிலப்படத்தைக் கூட எல்லாரையும் திருப்திப்படுத்தும்படி எடுத்து விடலாம். ஆனால் தமிழ்ப்படம் அப்படி எடுப்பது கஷ்டம். தமிழ்நாட்டில் பல்வேறு வகையான மக்கள் இருக்கின்றனர். அவர்களைத் திருப்திப் படுத்துவது கடினம்’ எனக் கூறியுள்ளார்.