செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 13 ஜனவரி 2020 (14:32 IST)

ஜித்தன் ரமேஷின் " மிரட்சி " - இப்படி ஒரு த்ரில்லர் படத்தை இதுவரை பார்த்திருக்கமாட்டீங்க!

ஜித்தன் படத்தின் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்த நடிகர்  ஜித்தன் ரமேஷ் இந்த படத்தின் மூலம் சவாலான  வில்லன் கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார். பாலிவுட் நடிகை  ஷ்ரத்தா தாஸ் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த இனாசஹா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் அஜெய்கோஸ், சாய், சனா, நிக்கிதா அனில்குமார்   ஆகியோர் நடித்துள்ளனர்.
 
M.V.கிருஷ்ணா இயக்கம் இப்படத்தை Take Ok Creations என்ற பட நிறுவனம் சார்பில் பி.ராஜன் தயாரிக்கிறார். இப்படம் குறித்து இயக்குனர் கூறியதாவது, மிரட்சி படத்தை  முழுக்க  முழுக்க திரில்லர் கதையாக உருவாக்கி இருக்கிறோம். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கோவாவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை  உருவாக்கப் பட்டுள்ளது. ஜித்தன் ரமேஷ் இதுவரை நடித்திராத ஒரு நடிப்பை இந்த படத்தில் பார்க்கலாம்.
 
படத்தில் உள்ள ஒட்டுமொத்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் வைத்து தொடர்ந்து 3 நாட்கள் ஒருமணிநேரம் இடைவேளை விட்டு படப்பிடிப்பை நடத்தி இந்த படத்திற்கான கிளைமாக்ஸ் காட்சிகளை படம்பிடித்தோம். தொடர்ந்து 3 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியது மிகவும் சவாலானதாக இருந்தது. மிகவும் சிரமப்பட்டு எடுத்த அந்தக்காட்சிகளை திரையில் பார்க்கும் போது மிக பிரமிப்பாக இருக்கும். இந்த அதி தீவிர திரில்லர் கதையை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது.இந்த  மிரட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்து மிரளவைக்கும்  என்பதில் எந்த ஐயமும் இல்லை. படப்பிடிப்பு முழுக்க முழுக்க கோவா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது, விரைவில் படம் வெளியாக உள்ளது  என்று இயக்குனர் M.V.கிருஷ்ணா.கூறினார்.