கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனம் ஆகியோர் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. இந்த படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்திய பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது.
இதையடுத்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. ஆனால் முந்தைய படத்துக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்ற்ய் மதுரையில் இந்த படத்தின் தொடக்க நிகழ்வு நடந்துள்ளது. இதையடுத்து படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாலை இந்த படத்தின் டீசர் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.