திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (12:13 IST)

ஜெயம் ரவியின் ‘பூமி’ படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

ஜெயம் ரவியின் ‘பூமி’ படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!
நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து விட்ட நிலையில் திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் 
 
ஏற்கனவே இந்த படத்தின் முதல் மூன்று போஸ்டர்கள், அதனை அடுத்து டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் சிங்கிள் பாடலை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் 
 
‘தமிழன் என்று சொல்லடா’ என்று தொடங்கும் இந்த பாடல் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என்று இந்த படத்தின் இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த பாடல் மிகவும் பவர்புல் மற்றும் உணர்ச்சிபூர்வமான பாடல் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
ஜெயம் ரவி, நிதிஅகர்வால், ரோனிட் ராய், சதீஷ், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ள இந்த படம், டட்லி ஒளிப்பதிவில் ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார்.