1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 24 ஜூன் 2020 (15:15 IST)

ரகசியத்தை உன்னுடனேயே எடுத்துச் சென்றுவிட்டாய்! சுஷாந்த் தற்கொலை குறித்து நடிகை கருத்து!

பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் குறித்து அவருடன் தோனி படத்தில் நடித்த நடிகை பூமிகா கருத்து தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34) சில தினங்களுக்கு அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டது இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர் 6 மாதங்களுக்கு மேலாக மன அழுத்தத்தில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலிவுட்டில் நிலவும் வாரிசுகளின் ஆதிக்கமே சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவரோடு தோனி படத்தில் அவருக்கு சகோதரியாக நடித்த பூமிகா ‘சுஷாந்த்… நீ எங்கு இருந்தாலும் கடவுளின் கையில் இருப்பாய். உன்னை எது எடுத்துச் சென்றதோ? அந்த ரகசியம் உன்னுடனே சென்று விட்டது. ஏன் உனக்கு இப்படி நடந்தது என்று பல்வேறு கருத்துகள் பேசப்படுகின்றன.. ஒரு உயிருற்கு மரியாதை கொடுங்கள். மனிதர்களை மதிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்காகவும், உங்களை சுற்றி இருப்பவர்களுக்காகவும் கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள். மனிதர்களை குறை சொல்லாதீர்கள். ஒவ்வொருவரையும் மதியுங்கள். சுஷாந்துக்காக பிராத்த்னைகள்’ எனத் தெரிவித்துள்ளார்.