ஜகமே தந்திரம் ரிலீஸ் தேதி அறிவிப்பு – உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்!

கோப்புப் படம்
Last Modified ஞாயிறு, 10 ஜனவரி 2021 (09:22 IST)

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தினை பிப்ரவரி 12 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தையும் எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென்று அமேசான் ப்ரைம் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் தனுஷும் தயாரிப்பு தரப்பும் படத்தை திரையரங்கிலேயே ரிலிஸ் செய்வது என்பதில் உறுதியாக இருந்துள்ளனர். இந்நிலையில் இப்போது படத்தை பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவெடுத்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.இதில் மேலும் படிக்கவும் :