அஜித்துக்கு கதை சொல்லியுள்ளாரா கார்த்திக் நரேன் – இணையத்தில் பரவும் செய்தி!

Last Modified புதன், 6 ஜனவரி 2021 (18:01 IST)

இளம் இயக்குனரான கார்த்திக் நரேன் அஜித்துக்காக ஒரு கதை சொல்லியுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர்களில் வெற்றிகரமானவராக வலம் வருபவர் கார்த்திக் நரேன். அவர் இயக்கிய துருவங்கள் பதினாறு திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து நரகாசூரன் என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை. அதையடுத்து இயக்கிய மாபியா திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

இப்போது தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் நடிக்கும் புதிய படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்நிலையில் இவர் அஜித்துக்கு ஒரு கதை சொல்லி அதை ஓகே செய்துள்ளதாகவும், அந்த படம் அஜித்தின் 61 ஆவது படமாக இருக்குமென்றும் தகவல்கள் பரவின. ஆனால் அந்த தகவல் உண்மை இல்லை என்று இப்போது தெரிய வந்துள்ளது.
இதில் மேலும் படிக்கவும் :