செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 27 அக்டோபர் 2018 (11:14 IST)

அர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீமேக் தலைப்பு இதுதான்..!

கடந்த ஆண்டு தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான  'அர்ஜூன் ரெட்டி'  சூப்பர் ஹிட்டானது. வசூலிலும் சக்கை போடுபோட்டது. இதனால் பல்வேறு மொழிகளில் அர்ஜுன் ரெட்டி ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழ் ரீமேக்கில் விக்ரம் மகன் துருவா நடித்தார். ஹிந்தி ரீமேக்கில் கதாநாயகனாக சாஹித் கபூர் நடிக்கிறார்.
 
தெலுங்கில் அர்ஜூன் ரெட்டியை இயக்கிய இயக்குநர் சந்தீப் வங்காவே இப்படத்தையும் இயக்குகிறார். சினி1 ஸ்டூடியோ படத்தை தயாரிக்கிறது.
 
இந்நிலையில், படம் குறித்து இயக்குனர் சந்தீப் வங்கா கூறுகையில், "ஹிந்தியில் ரீமேக் செய்யணும் என்று எண்ணிய போதே 'கபிர் சிங்' என்ற பெயர்தான் எங்கள் மனதில் தோன்றியது. தற்போது அதையே டைட்டிலாக வைத்துள்ளோம். 'கபிர் சிங்'கும் அர்ஜூன் ரெட்டி போன்ற துடிப்பான கதாப்பாத்திரமாக இருக்கும் என்றார்.