திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 1 மார்ச் 2018 (22:33 IST)

காலா டீசர் ஒத்திவைப்பு: ரஞ்சித்துக்கு மனவருத்தமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தின் டீசர் இன்று காலை 11மணிக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சங்கரர் மறைவின் காரணமாக இந்த டீசர் வெளியாகும் நாள் ஒருநாள் தள்ளி வைக்கப்படுவதாக இந்த படத்தின் தயாரிப்பாளரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் தனது டுவிட்டரில் அறிவித்தார்.

இதற்கு ஒருசில மணி நேரங்களுக்கு முன் காலா' டீசர் நாளை 11 மணிக்கு வெளியாகும் என்று தனுஷ் போட்ட டுவீட்டை ரீடுவீட் செய்த இயக்குனர் ரஞ்சித், தள்ளி வைக்கப்பட்டதாக போட்ட டுவீட்டை ரீடுவீட் செய்யவில்லை. இதனால் 'காலா' டீசர் ஒத்தி வைக்கப்பட்டதில் ரஞ்சித்துக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது.

எனவே திட்டமிட்டபடி காலா டீசரை ரஞ்சித் ரிலீஸ் செய்வார் அல்லது அவரது தரப்பினர் லீக் செய்வார்கள் என்று சமூக வலைத்தளத்தில் ஒரு வதந்தி பரவி வருகிறது. ஆனால் ரஜினி மீது உள்ள மரியாதையால் இதை ரஞ்சித் செய்ய மாட்டார் என்றும் ஒருதரப்பினர் கூறி வருகின்றனர். எனவே 11 மணி வரை பொறுத்திருந்து என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம்