வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2018 (14:11 IST)

ஸ்ரீதேவியின் இறுதி அஞ்சலி - மும்பை செல்கிறார் கமல்ஹாசன்

மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருக்கு ஆறுதல் சொல்ல நடிகர் கமல்ஹாசன் மும்பை செல்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

 
துபாயில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவி நேற்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரது உடல் இன்று இரவு சிறப்பு விமானம் மூலம் இந்தியா வரவுள்ளது.  
 
தடவியல் துறையின் சான்றிதழ் கிடைக்காததால் உடலை இந்திய கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் மும்பைக்கு கொண்டு வரப்பட்டவுடன், அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்கு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
 
ஸ்ரீதேவி தமிழில் முதலில் அறிமுகமான மூன்று முடிச்சு படத்தில் ரஜினி, கமல் என இருவருமே நடித்திருந்தனர். அதேபோல், அவரின் அடுத்த படமான 16 வயதினிலே படத்திலும் ரஜினி, கமல் நடித்திருந்தனர். இந்த படம்தான் அவர்கள் மூவரையும் பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது.  அதன் பின் ஸ்ரீதேவி, ரஜினி மற்றும் கமல்ஹாசனுடன் பல படங்கள் நடித்தார். 
 
அந்நிலையில், ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவே மும்பை சென்றுவிட்டார்.  ஆனால், கமல்ஹாசன் செல்வாரா என்கிற சந்தேகம் எழுந்தது. ஏனெனில், இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளும் பழக்கம் தனக்கில்லை என சமீபத்தில் அவர் கூறியிந்தார்.
 
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இன்று மும்பை செல்வது உறுதியாகியுள்ளது. இன்று மாலை 3.25 மணிக்கு விமானம் மூலம் அவர் மும்பை செல்கிறார்.  ஸ்ரீதேவின் கணவர் போனி கபூர் மும்பை வந்தவுடன் அவருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு அவர் சென்னை வருகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.