திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (19:41 IST)

ரஜினிகாந்தை நினைத்தாலே ஸ்ரீதேவிக்கு சிரிப்பு வந்துவிடும்... ஏன் தெரியுமா?

ரஜினிகாந்தை நினைத்தாலே ஸ்ரீதேவிக்கு சிரிப்பு வந்துவிடுமாம். அதற்கான காரணத்தை ஸ்ரீதேவியே தெரிவித்துள்ளார்.

 
ஸ்ரீதேவி ஏற்கெனவே அளித்துள்ள பேட்டி ஒன்றில், “ரஜினி, கமல் இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள். என் அம்மாவுடன் ரஜினி எப்போதுமே நட்பாக இருப்பார். என் அம்மாவுக்கும் ரஜினியை ரொம்பப் பிடிக்கும்.
 
‘கமலைப் போல் பெரிய ஸ்டார் ஆக வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?’ என ரஜினி என் அம்மாவிடம் கேட்டார். ‘கண்டிப்பாக நீ பெரிய ஸ்டாராக வருவாய்’ என்று அம்மா சொன்னார். ‘அப்போது 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்க வேண்டும்’ என ரஜினி சொன்னார். அதை இப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்பு வந்துவிடும்” என்று கூறியிருக்கிறார்.
 
அதுமட்டுமல்ல... ரஜினியும், ஸ்ரீதேவியும் எவ்வளவு நெருக்கமானவர்கள் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி. 2011ஆம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார் அல்லவா? அப்போது, அவர் குணமடைய வேண்டும் என்று ஒரு வாரம் விரதம் இருந்திருக்கிறார் ஸ்ரீதேவி. ரஜினிக்கு சாய்பாபாவைப் பிடிக்கும் என்பதால், ஒரு வாரம் கழித்து ஷீரடிக்குச் சென்று தன்னுடைய விரதத்தை நிறைவு செய்துள்ளார் ஸ்ரீதேவி.