புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 பிப்ரவரி 2021 (12:18 IST)

பவர் ரேஞ்சர் பாடலை பாடியது ஏ.ஆர்.ரகுமானா? – இணையத்தில் உலவும் சர்ச்சை!

பிரபல தொலைக்காட்சி தொடரான பவர் ரேஞ்சரின் தீம் பாடலை பாடியது ஏ.ஆர்.ரகுமான் என இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது.

90ஸ் கிட்ஸ் இடையே மிகவும் பிரபலமாக இருந்த டிவி தொடர்களில் மிகவும் முக்கியமானது பவர் ரேஞ்சர்ஸ். பவர் ரேஞ்சர்ஸில் டைனோ தண்டர், மிஸ்டிக் போர்ஸ், ஆபரேசன் ஓவர் ட்ரைவ் போன்ற பல தொடர்கள் இருந்தாலும், Power rangers SPD தான் இதுவரையிலும் அதிகமானோரால் மிகவும் விரும்பப்பட்ட தொடராக உள்ளது.

இந்த எஸ்பிடி தொடரின் தொடக்கத்தில் வரும் ‘பவர் ரேஞ்சர்ஸ் இந்த உலகத்தை காப்போம்’ தீம் சாங் மிகவும் பிரபலமான ஒன்று, தற்போது இந்த பாடலை பாடியவர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் என சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது. திடீரென இந்த செய்தி ட்ரெண்டாகி வரும் நிலையில் அந்த பாடலை அவர் பாடவில்லை என்றும் ஏ.ஆர்,ரகுமானை நீண்ட காலமாக பின் தொடர்ந்து வருபவர்களும் கூறி வருகின்றனர்.