வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 7 ஜூன் 2019 (20:13 IST)

நடிகர் சல்மான் கானை மிஞ்சினாரா தளபதி விஜய்??

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்த கடந்த ரமலான் (ரம்ஜான்) அன்று வெளியானது பாரத் படம். இந்த திரைப்படத்தின் வசூல், விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தின் வசூலை விடவும் குறைவு என்று கூறப்பட்டுள்ளது.

பாரத் திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்திய அளவில் ’42 கோடி ரூபாய்’ வசூல் ஆனதாக கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தீபாவளி அன்று, நடிகர் விஜய் நடிப்பில்; வெளியான  சர்கார் திரைப்படத்தின் முதல் நாள் வசூலை விட இது குறைவு என தகவல் வெளியாகிறது.

மேலும் சல்மான் கான் நடிப்பில் கடந்த  2015 ஆம் ஆண்டு வெளியான ”ப்ரேம் ரதோன் தோன் பாயோ” என்ற திரைப்படத்தை அடுத்து இந்தியாவில் மிகஅதிக வசூல் சாதனை படைத்தது ’பாரத்’ திரைப்படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.